Suministro, instalación y puesta en marcha de equipos de iluminación quirúrgica con anclaje a techo para el hospital de Zafra dependiente de la Gerencia del Área de Salud de Llerena-Zafra

Id licitación: CS/04/1121022755/21/PAS; Órgano de Contratación: Gerencia del Área de Salud de Llerena-Zafra; Importe: 90000 EUR; Estado: PUB

Nro Expediente:
Empresa:
Estimado:
Dirección:
Fecha fin:

Mantenimiento vehículos 1.5.8 Belvis de la Jara.

Id licitación: 2021/002787; Órgano de Contratación: Delegación Provincial de la Consejería de Desarrollo Sostenible en Toledo; Importe: 3171.84 EUR; Estado: RES

Nro Expediente:
Empresa:
Estimado:
Dirección:
Fecha fin:

Prestación del servicio de gestión de nóminas y asesoramiento laboral de CERSA para 3 años, a realizar de acuerdo con el Convenio Colectivo General de Ámbito Estatal para el Sector de Entidades de Seguros, reaseguros y mutuas colaboradoras con la Seguridad Social

Id licitación: 03/2021; Órgano de Contratación: Compañía Española de Reafianzamiento S.M.E., S.A.; Importe: 12000 EUR; Estado: PRE

Nro Expediente:
Empresa:
Estimado:
Dirección:
Fecha fin:

Suministro, instalación y puesta en marcha de equipos de iluminación quirúrgica con anclaje a techo para el hospital de Zafra dependiente de la Gerencia del Área de Salud de Llerena-Zafra

Id licitación: CS/04/1121022755/21/PAS; Órgano de Contratación: Gerencia del Área de Salud de Llerena-Zafra; Importe: 90000 EUR; Estado: PUB

Nro Expediente:
Empresa:
Estimado:
Dirección:
Fecha fin:

Mantenimiento vehículos 1.5.8 Belvis de la Jara.

Id licitación: 2021/002787; Órgano de Contratación: Delegación Provincial de la Consejería de Desarrollo Sostenible en Toledo; Importe: 3171.84 EUR; Estado: RES

Nro Expediente:
Empresa:
Estimado:
Dirección:
Fecha fin:

Prestación del servicio de gestión de nóminas y asesoramiento laboral de CERSA para 3 años, a realizar de acuerdo con el Convenio Colectivo General de Ámbito Estatal para el Sector de Entidades de Seguros, reaseguros y mutuas colaboradoras con la Seguridad Social

Id licitación: 03/2021; Órgano de Contratación: Compañía Española de Reafianzamiento S.M.E., S.A.; Importe: 12000 EUR; Estado: PRE

Nro Expediente:
Empresa:
Estimado:
Dirección:
Fecha fin:

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆகிறாரா கனிமொழி?

ஹைலைட்ஸ்:

  • பொது மக்களை கனிவுடன் அணுகும் பாங்கு போன்றவை கனிமொழிக்கு நல்ல இமேஜை கொடுத்துள்ளது
  • திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதும் பின்பற்றப்பட்டு வருகிறது
  • கனிமொழிக்கு டெல்லி அரசியலைத் தாண்டி கட்சிக்குள் முக்கிய பதவி வழங்க வேண்டும்

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், பொது முடக்கம், ஊரடங்கு, கட்டுப்பாடுகள், ஆக்சிஜன் இல்லையாமே, படுக்கைகள் பற்றாக்குறையாமே என்ற பற்றிய பேச்சுகள்தான் ஊரெல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், தமிழக அரசியல் களத்திலோ சத்தமில்லாமல் பல பணிகள் நடந்து வருகின்றன.

தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கு ஆதரவாக உள்ள நிலையில், அதனை பல்வேறு ரிப்போர்ட்டுகள் மூலம் கட்சித் தலைவர் ஸ்டலின் உறுதியும் படுத்தியுள்ளார். இதையடுத்து ஸ்டாலினின் கொடைக்கானல் விசிட், அங்கு கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்ட அமைச்சரவை பட்டியல் உள்ளிட்டவைகள் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளன.

அந்த லிஸ்ட்டில் யார்யாருடைய பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது பற்றிய தகவல்கள் தற்போது கசிந்த வண்ணம் உள்ளன. அதன்படி, தனது ஆட்சிக்காலத்தில் புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ள ஸ்டாலின், சபாநாயகர் பதவியை கட்சியின் மூத்த நிர்வாகியும், திமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான சுப்புலெட்சுமி ஜெகதீசனுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாகப் பெண்ணுக்கு சபாநாயகர் வாய்ப்பளித்த பெருமை ஸ்டாலினுக்கு சென்று சேருவதுடன், சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் நீண்ட அனுபவம் பெற்ற ஒருவரையும் அந்த பதவிக்கு அமர்த்தலாம் என்பதும் கணக்காக இருக்கிறது.

அதுதவிர இதில் வேறு சில கணக்குகளும் உள்ளன. ஏற்கனவே 73 வயதான சுப்புலெட்சுமி ஜெகதீசன் கடந்த தேர்தலில் சீட்டே கேட்கவில்லை. அவரை அழைத்து ஸ்டாலினே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறியதால் அவரும் தேர்தலில் நின்றார். வயது முதிர்வு காரணமாக தேர்தலில் நிற்க வேண்டாம் என்று அவர் முடிவெடுத்ததாக அப்போது கூறப்பட்டது. இதிலிருந்து கட்சிப் பணிகளில் இருந்தும் அவர் ஒதுங்குவார் என்று எதிர்பார்க்கலாம். எனவே, நீண்ட காலமாக அவரிடம் இருக்கும் துணைப் பொதுச் செயலாளர் பதவி வேறு ஒரு பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும். திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், அதற்கான போட்டிகள் இன்னொரு பக்கம் திமுகவுக்குள் தொடங்கிவிட்டன.

ஜெயிக்கப்போவது யாரு? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: டிசைடிங் ஃபேக்டர் யார்?
முன்னதாக, கட்சிக்குள் கனிமொழிக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளார்கள் கருணாநிதி மறைவுக்கு பின்னர் இருந்தே தொடர் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல், கலைஞரின் மகள் என்ற அடையாளத்தையும் தாண்டி, கொள்கைகளை தெளிவாக எடுத்துக்கூறும் திறமை, கட்சியனரை, பொது மக்களை கனிவுடன் அணுகும் பாங்கு போன்றவை கனிமொழிக்கு நல்ல இமேஜை கொடுத்துள்ளது. அத்துடன், கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையிலும் கூட, கவச உடை அணிந்து வாக்களிக்க வந்தது திமுக மீதான அவரது பற்றை காட்டும் விதமாக இருந்ததாக உடன்பிறப்புகள் நெகிழ்ந்தார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, திமுகவுக்காக அவர் மேற்கொண்ட பிரசாரங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவைகள் தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கி உயர முக்கிய காரணமாக இருக்கும். எனவே, திமுக மகளிரணிச் செயலாளராக பதவி வகிக்கும் கனிமொழிக்கு டெல்லி அரசியலைத் தாண்டி கட்சிக்குள் முக்கிய பதவி வழங்க வேண்டும் என்று பி.கே.டீமும் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறியுள்ளது. இதனால், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு கனிமொழிக்கு வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

»அன்றே சொன்ன ரஜினி»… திடீரென கொண்டாடப்படும் ரஜினி… ஏன் தெரியுமா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆறு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என அறிவித்ததால் 5 முனை போட்டியை தமிழகம் சந்தித்தது. கடந்த ஜனவரியில் கட்சித் துவக்குவேன் என்றும் டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பேன் என்றும் ரஜினியின் அரசியல் அலை சுனாமியை போல அடித்த நிலையில் கடந்த டிசம்பர் 29இல் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது அவரது அறிவிப்பு.

அப்போது, » நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூடி பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் இருக்க நேர்ந்தது» என கூறினார். குறிப்பாக, » இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

தமிழ்நாட்டில் சனிக்கிழமைகளில் கறி கடைகளை மூட உத்தரவு..!

நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை» என்று தெரிவித்திருந்தார் ரஜினி. இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தை குறித்து ரஜினிகாந்த் முன்கூட்டியே விவேகமாக சிந்தித்து செயல்பட்டதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், »அன்றே சொன்ன ரஜினி» என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவியுள்ளது. அன்றாட பாதிப்புகளும், இழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் இதற்கு முற்றிலும் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும்தான் காரணம் என்று உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. ஆனால், நடிகர் ரஜினி இந்த குற்றச்சாட்டுக்கு வாய்பளிக்காமல் முன்கூட்டியே கொரோனா சூழலை காரணம் காட்டி அரசியலை விட்டு ஒதுங்கியது அவரது பொதுநல சிந்தனை என்றும் நெட்டிசன்கள் நெகிழ்கின்றனர்.